சென்னையில் தொடர் சோகம்; வருகின்ற 18ஆம் தேதி சென்னைக்கு மீண்டும் ரெட் அலார்ட்!

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையின் தீவிரம் அடைந்து காணப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பெய்த கனமழையால் அங்கு பல சாலைகள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு நீரில் மூழ்கின.

வடகிழக்கு பருவமழை

இதனால் சென்னையில் கடந்த சில நாட்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருந்தது. இந்த நிலையில் அவை தற்போது நீக்கப்பட்டு காணப்படுகிறது. சென்னையில் மழைப்பொழிவு படிப்படியாக குறைய தொடங்கியது.

இந்த நிலையில் சென்னைக்கு மீண்டும் ரெட் அலார்ட் வருகின்ற வியாழக்கிழமை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி நவம்பர் 18ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மழை

இந்த ரெட் அலர்ட் என்பது அதி தீவிர கனமழை பெய்யும் என்பதனை குறிப்பதாக காணப்படும். இந்த நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நவம்பர்  18ஆம் தேதி சென்னை மட்டுமன்றி திருவள்ளூர், காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் சென்னைக்கு மீண்டும் ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டது அங்குள்ள மக்களை மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment