இந்த ஆண்டு முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் ரெட்அலர்ட்!

ரெட் அலர்ட்

தமிழகத்துக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பெருவாரியாக கனமழை பெய்து வருகின்றன.

மழை

இந்த நிலையில் தமிழகத்தின் உப்பு மாநகரமாக காணப்படுகின்ற தூத்துக்குடி மாநகரத்திற்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி  மாவட்டத்திற்கு ரெட் அலார்ட்  இன்று கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி   மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூர் பகுதியில் 20 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

அங்குள்ள கோவில்பட்டி, குலசேகரபட்டினம், எட்டயபுரம், கீழஈரால் போன்ற பல பகுதிகளில் தற்போது வரை தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்றைய தினம் ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த சில மணி நேரத்தில் பெய்த மழையால் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் மழை நீருக்குள் மூழ்கியது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print