Connect with us

இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை..!!!

rain

தமிழகம்

இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றைய தினத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்யும் என கூறியுள்ளது.

இந்நிலையில் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறாக வருகின்ற 8-ம் தேதி தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top