தமிழ்நாட்டுக்கு ரெட் அலார்ட்! நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலார்ட் கொடுத்துள்ளது.அதோடு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தென்கிழக்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.

சென்னை

இவை நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அன்று தெற்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் அவர் கூறினார். இவ்வாறு உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்க கூடும் என்றும் புவியரசன்  கூறியுள்ளார்.

சென்னைக்கு ரெட்அலர்ட் என்று ஆராய்ச்சி எடுத்து வைத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார். ஆனால் தற்போதைய நிலவரப்படி சென்னையில்  10-ஆம் தேதிக்கு ஆரஞ்ச் அலர்ட் மட்டுமே விதிக்கப் பட்டுள்ளது என்றும் புவியரசன்  கூறியுள்ளார்.ஆராய்ச்சி அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் கொடுக்கப்படும் என்றும் புவியரசன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment