தமிழ்நாட்டில் 7 வடமாவட்டங்கள், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்! அனைத்து மாவட்டங்களுக்கும் மழை;

தமிழகத்தில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது. அதோடு இந்திய வானிலை ஆய்வு மையமும் தமிழகத்திற்கு ரெட் அலார்ட் அளித்திருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகள் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை கள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மழை

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வட மாவட்டங்களுக்கு மற்றும் புதுச்சேரிக்கும்  ரெட் அலார்ட் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி தமிழ்நாட்டில் ஏழு வட மாவட்டங்களுக்கு  ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதனால் இந்த மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை,சேலம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வெறும் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது தெரிய வந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment