கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! அதை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை யோடு கூடிய சூறாவளி காற்று வீசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அனுப்பி உள்ளது. ஏனென்றால் நவம்பர் 27ஆம் தேதி குமரி கடல் ,தென்மேற்கு கடல் பகுதிகளில் இடையிலேயே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மீனவர்

அதோடு நவம்பர் 29ம் தேதியில் அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதோடு அந்தமான் கடற்கரை பகுதிகளில் காற்று தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

இன்றும், நாளையும் தமிழக கடலோர பகுதிகளுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையையும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment