ஒரு வழியாக சென்னைக்கான ரெட் அலர்ட் விலகியது! கொண்டாட்டத்தில் சென்னை மக்கள்!!

நமக்கு தினம்தோறும் வானிலை நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அளித்துக் கொண்டு வந்தது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த சில நாட்களாக இந்திய வானிலை ஆய்வு மையமும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்திருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம்

குறிப்பாக சென்னை மாநகரத்திற்கு ரெட் அலர்ட் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் சென்னைக்கான ரெட் அலார்ட் தற்போது விலகியுள்ளது.

அதன்படி சென்னைக்கான ரெட் அலார்ட் விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னைக்கு மிக மிக பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு இனி இல்லவே இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை

சென்னையில் காற்று மற்றும் கன மழைக்கான அலாட் மட்டுமே இனி தொடர்கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்று இரவில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இரவில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் சென்னை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment