மக்களே எச்சரிக்கை! அடுத்த ரெண்டு நாளைக்கு சென்னைக்கு ரெட் அலர்ட்!!

வங்கக் கடலில் உருவான 2 காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னைக்கு கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்தது. இதனால் சென்னையில் உள்ள பெருவாரியான நகரங்கள் அனைத்தும் மழை நீருக்குள் மூழ்கியது.

வானிலை மையம்

இந்த நிலையில் சென்னையில் சில நாட்களாக பெய்த மழை படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் சென்னைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவில் தலைநகர் சென்னையில் அதிக மழை கொட்டித் தீர்த்தது.

இதனால்  சென்னையில் உள்ள பெருவாரியான சாலைகளில் மழைநீர் தேங்கியது, சென்னையில்  போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டன. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு சென்னைக்கு ரெட்அலர்ட் ஒதுக்கியுள்ளது.

அதன்படி சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று  வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்வதால் சென்னைக்கு ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment