வடமாநிலங்களில் புத்தாண்டிற்கு பிறகு கடுமையான மூடுபனி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக போக்குவரத்து, விமானம், ரயில் போன்ற சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடை அருகே மது அருந்திய சிஐடியு அமைப்பினர்: தட்டிக் கேட்டதால் பயங்கரம்!!
அதே போல் ராஜஸ்தான் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மூடு பனி, குளிர் அலையானது வருகின்ற ஜனவரி 10ம் தேதி மேல் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து வடமாநிலங்களில் வாட்டிவரும் கடும் பனியால் இதுவரையில் 25-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
19 கிலோ கஞ்சாவை எலி தின்னுடுச்சு.. போலீசார் கொடுத்த அறிக்கையால் பரபரப்பு!!
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைநகர் டெல்லிக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.