குஷியோ குஷி..!!! இன்று 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்..!!!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மூன்று மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் படி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் தமிழகத்தை பொறுத்தவரையில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment