8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வாபஸ்: பொதுமக்கள் நிம்மதி!

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு நேற்றிரவு கரையை கடந்தது என்பதும் இதனால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வீசியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இதனால் ரெட்அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த ரெட் அலர்ட் வாபஸ் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அந்த பகுதிகளில் கனமழை குறித்த ஆபத்து நீங்கியது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை உள்பட 8 மாவட்டங்களில் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டு உள்ளதை அடுத்து தற்போது அங்கு வெள்ள மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மீண்டும் மின் வினியோகம் செய்வதில் மின்சார அதிகாரிகள் தீவிர பணிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருப்பினும் ஒரு சில பகுதிகளில் மட்டும் மின் வினியோகம் செய்யப்படவில்லை என்றும் அந்த பகுதிகளில் மின் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment