Connect with us

நீட் நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம்!-எட்டு பேர் கைது;

நீட்

செய்திகள்

நீட் நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம்!-எட்டு பேர் கைது;

நேற்றைய தினம் நாடெங்கும் நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. நம் தமிழகத்திலும் ஏராளமான மாணவ மாணவிகள் இந்த நீட் நுழைவு தேர்வுக்கு கலந்து கொண்டிருந்தனர். இந்த தேர்வானது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொத்தம் 13 மொழிகளில் நடைபெற்றது.

நேற்று மதியம் 02 மணிக்கு நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது. இந்த நீட் தேர்விற்காக மாணவ மாணவிகள் 01:30 மணிக்குள்ளே இருக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

மேலும் அவர்களுக்கு பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் நேற்றைய தினம் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிபிஐ தகவல் அளித்துள்ளது.

ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது, உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top