நம் இந்தியாவில் அதிக அளவு திருட்டு சம்பவம் காணப்படுகிறது. நம் நாட்டில் முற்றிலுமாக சிலை கடத்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் ஆங்காங்கே சிலை கடத்தல் சம்பவமும் நடைபெற்றுக் கொண்டேதான் வருகிறது. அதிலும் குறிப்பாக கோவில்களில் உள்ள சிலைகளை பெரும்பாலும் கடத்தப்படுகின்றன. இந்த சிலை கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.
அதன்படி 2016ஆம் ஆண்டு கடத்தப்பட்ட மரகத லிங்கம் இன்று மீட்கப்பட்டுள்ளது. தஞ்சையில் வங்கி லாக்கரில் வைத்து இருந்த சுமார் 500 கோடி மதிப்பிலான பச்சை மரகத லிங்கம் தற்போது மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சிலை 2016 ஆம் ஆண்டில் நாகை திருக்குவளையில் உள்ள கோவிலில் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. தஞ்சை அருளானந்தநகர் சாமியப்பனின் லாக்கரில் இருந்த பச்சை மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மீட்டது. சாமியப்பனுக்கு எப்படி பச்சை மரகத லிங்கம் கிடைத்தது என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.