Connect with us

அழுகிய நிலையில் சடலம் மீட்பு: நெல்லையில் பரபரப்பு!!

death 1 1

தமிழகம்

அழுகிய நிலையில் சடலம் மீட்பு: நெல்லையில் பரபரப்பு!!

நெல்லை அடுத்த பழையபேட்டை கண்டியபேரி பகுதியில் வசித்து வருபவர் 52 வயதான சொர்ணம். இவர் ஊர்காவலனாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு முதல் மனைவி இறந்து விட்ட நிலையில் இரண்டாவதாக குளோரி என்பவரை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தற்போது உமேஷ், அஜய் என இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இரண்டாவது மனைவி கோபித்துக்கொண்டு அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனியாக வசித்து வந்த சொர்ணம் வீட்டில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. பின்னர் அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சொர்ணம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்யப்பட்டாரா? போன்ற பல கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top