Connect with us

அப்பப்பா சுட்டெரித்த வெயில்!! உங்க ஊரில் எவ்வளவு தெரியுமா?

heat

Tamil Nadu

அப்பப்பா சுட்டெரித்த வெயில்!! உங்க ஊரில் எவ்வளவு தெரியுமா?

மே மாதத்தை விட ஜூன் மாதம் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. ஏனென்றால் கடந்த மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் மழை பெய்தது. இதற்கெல்லாம் சேர்த்து கொடுப்பது போல் தமிழகத்தில் நிகழ்கிறது.

அதிலும் இன்றைய தினம் குறிப்பிட்ட சில பகுதிகளில் பதிவான வானிலை நிலவரம் கொடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் இன்று 28 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பமும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.

ஊட்டியில் 13 டிகிரி செல்சியஸ் முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் இன்று பதிவாகியுள்ளது. கொடைக்கானலில் 15 டிகிரி முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் என்று பதிவாகியுள்ளது.

மதுரை மாநகரில் 26 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இன்று ஒரே நாளில் வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினத்தில் 27 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. கன்யாகுமரியில் 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைந்தபட்சம் ஆகவும் 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகவும் பதிவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top