விமர்சனங்களில் ஏமாற்றம் அடைந்தாலும் வசூலில் டாப்பு டக்கரு சாதனை!

நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த அண்ணாத்த  திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

அண்ணாத்த

இதில் கதாநாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் நடிகை குஷ்பூ, நடிகை நயன்தாரா, நடிகை மீனா, நடிகை கீர்த்தி சுரேஷ் போன்ற ஏராளமான நடிகைகள் பட்டாளம் கொண்ட திரைப்படமாக நேற்றையதினம் அண்ணாத்த திரைப்படம் வெளியானது.

அண்ணாத்த  திரைப்படம் குறித்த விமர்சனங்கள் பெரும் ஏமாற்றத்தை கண்டு இருந்தாலும் அண்ணாத்த  திரைப்படம் வசூல் சாதனை புரிந்ததாக காணப்படுகிறது. அண்ணாத்த  திரைப்படம் முதல் நாள் வசூலாக ரூபாய் 34.92 கோடியை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை முதல் குமரி வரை உள்ள அனைத்து ஊரிலும் உள்ள திரையரங்குகளில் அடிப்படையில் ரூபாய் 34.92 கோடி வசூலித்து அண்ணாத்த படம் சாதனை புரிந்துள்ளது. தீபாவளி நாளான நவம்பர் 4ல் வெளியான அண்ணாத்த படத்துக்கு ரசிகர்கள் பேராதரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது.

தீபாவளிக்கு வெளியான படங்களை காட்டிலும் அண்ணாத்த திரைப்படம்  வசூல் வேட்டையில் முத்திரை பதித்திருக்கிறது .

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment