டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க பரிந்துரை: ஐகோர்ட் கிளை உத்தரவு!

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தொடர்ந்தார். அதில் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் எதிர்காலத்தை நம்பியுள்ள மாணவர்களின் வாழ்கை கேள்விக்குறியாகி உள்ளது.

குறிப்பாக 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்யப்படுவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மதுபான விற்பனையை தமிழில் அச்சிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுக்கு 5 உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அதன் படி.
21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்வதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அதே போல் பொதுமக்களின் நலன் கருதி, டாஸ்மாக் விற்பனை நேரம் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நேரத்தை மாற்றியமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. மதுபான விடுதிகளில் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், மது விற்பனை விலைப்பட்டியல் மற்றும் மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகளை குறித்து அனைத்தும் தமிழில் அச்சிட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்திருப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.