
Entertainment
ஜெய்பீம் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: அதுவும் முதல்வர் கையில்!!
தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த படமாக ஜெய் பீம் படம் அமைந்தது. குறிப்பாக உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட இப்படம் பல விருதுகளைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் நல்ல சாதனையை படைத்தது.
அந்த வகையில் கூட்டத்தின் ஒருவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஞானவேல் இப்படத்தினை இயக்கினார். இப்படத்தில் நடிகர் சூர்யாவின் அசத்தல் நடிப்பானது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் ஜெய் பீம் படம் நல்லவரவேற்பை பெற்றாலும் சில தரப்பினர் இடையே எதிர்ப்பு கிளம்பியது. இதனால் நடிகர் சூர்யாவுக்கு மிரட்டலும் வந்தது. இதனிடையே இப்படத்திற்கு முத்தமிழ் பேரவையின் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. அப்போது படத்தின் இயக்குனரான ஞானவேலுக்கு தமிழக முதல்வர் விருது வழங்கினார்.
பின்னர் பேசிய தமிழக முதல்வர் இந்த படத்தைப்பார்த்த போது 2, 3 நாட்கள் நான் தூங்கம் வரவில்லை என்றும் இந்த படம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார். அதோடு சிறைச்சாலை, சித்திரவதை காட்சிகளை நான் நேரடியாக அனுபவித்து இருப்பதாகவும் அந்த படம் கூடுதலாக தாக்கத்தை ஏற்படுத்தியது என கூறினார்.
