Connect with us

சமையல் எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என்ன? விக்கிரமராஜா விளக்கம்

best cooking oil 14 1500013045

Tamil Nadu

சமையல் எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என்ன? விக்கிரமராஜா விளக்கம்

சமையல் எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என்ன? விக்கிரமராஜா விளக்கம்

ரஷ்யா உக்ரைன் போரால் சமையம் எண்ணெய் விலை உயர்வுக்கு வியாபாரிகள் காரணம் இல்லை என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமராஜா ரஷ்யா- உக்ரைன் போரின் காரணமாக சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டினார்.

சமையம் எண்ணெய் விலை ஏற்றத்திற்கும் வியாபாரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய அவர் கார்ப்பரேட் கம்பெனிகள் சமையம் எண்ணெயினை பதுக்க வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், வருகின்ற மே-5 ஆம் தேதி வணிகர்கள் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற இருப்பதாகவும் வணிகர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் திருப்புமுனை மாநாடாக அமையும் என விக்கரம ராஜா தெரிவித்துள்ளார்.

கொரொனா நோய் தொற்று காரணமாக 13% வியாபாரிகள் காணாமல் போனதாகவும் 40% வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top