இந்தியாவில் அறிமுகமான Realme Narzo 50A Prime: என்னென்ன சிறப்பம்சங்கள்..!

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரியல்மீ நிறுவனம் அவ்வப்போது புதிய மாடல்களை தங்களது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஜூன் 2ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள Realme Narzo 50A Prime என்ற மாடல் குறித்து தற்போது பார்ப்போம்.

Realme Narzo 50A Prime மாடல் ஸ்மார்ட்போன் Unisoc T612 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 2,408×1,080 பிக்சல்கள் ரெசலூசன் கொண்ட 6.60-இன்ச் IPS LCD டிஸ்ப்ளே இதில் அமைந்துள்ளது. பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாருடன் கூடிய 3 கேமிராக்கள், 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இதில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி மற்றும் Realme UI R பதிப்பில் Android 11 இல் இயங்குகிறது.

Realme Narzo 50A Prime இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. அதில் ஒன்று 4GB RAM + 64GB ஸ்டோரேஜ், இரண்டாவது 4GB RAM + 128GB ஸ்டோரேஜ். 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 11,499 மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 12,499.

Realme Narzo 50A Prime ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை சுருக்கமாக பார்போம்;

* 2,408×1,080 பிக்சல்கள் ரெசலூசன் கொண்ட 6.60-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
* யுனிசாக் டி612 செயலி
* 4 ஜிபி ரேம்
* 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ்
* 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமிரா
* முன் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
* 5000mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 11 உடன் ரியல்மி யுஐ ஆர் எடிஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
* விலை: ரூ. 11,499 (4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு) / ரூ. 12,499 (4ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு)

Realme Narzo 50A Prime ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்ப்ளே, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் சிறந்த கேமராவுடன் கூடிய பட்ஜெட்டிற்கு ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews