Realme 11 Pro 5G மொபைலை முன்கூட்டியே ஆர்டர் செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!

Realme 11 Pro 5G மொபைல் ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் இந்த மொபைல் குறித்த சிறப்பு அம்சங்களையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த மொபைலை எப்போது முன் பதிவு செய்யலாம்? முன்பதிவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளன.

Realme 11 Pro 5G மொபைல் போனை ஜூன் 8-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என்றும் ஜூன் 14ஆம் தேதி முன்பதிவு முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த மொபைல் போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 4499 மதிப்புள்ள realme வாட்ச் 2 ப்ரோ இலவசமாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இஎம்ஐ வசதி உள்ளிட்ட வங்கி சலுகைகளையும் முன்பதிவு செய்வதால் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 8-ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் முன்பதிவு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Realme 11 Pro 5G ஸ்மார்ட்போனை பொருத்தவரை டிரிபிள்-கேமரா சிஸ்டம் பின்பக்கத்தில் இடம்பெறும் என்றும், பிரதான சென்சார், அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்றும், செல்பி கேமராவும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் Realme 11 Pro 5G ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 7050 செயலி மூலம் இயக்கப்படும். 2.5GHz அம்சம் கொண்ட ஆக்டா-கோர் சிப், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

மேலும் ஆண்ட்ராய்டு 13 ஐ இயங்கும் இந்த மாடல் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே முழு HD+ தெளிவுத்திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews