Connect with us

அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைப்பது தான் உண்மையான வளர்ச்சி: வீடியோவில் ஸ்டாலின்

ஸ்டாலின்

செய்திகள்

அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைப்பது தான் உண்மையான வளர்ச்சி: வீடியோவில் ஸ்டாலின்

அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைப்பது தான் உண்மையான வளர்ச்சி: வீடியோவில் ஸ்டாலின்

நம் தமிழகத்தில் பலரும் தேர்தல் பரப்புரையில் காலத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக முதலமைச்சர் காணொலி மூலமாக வாக்கு சேகரிப்பில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

இதுகுறித்து நேற்றையதினம் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைப்பதுதான் வளர்ச்சி என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை வழிநடத்துவது திராவிட சிந்தனை மாடல் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சிதான் திராவிட சிந்தனை மாடல் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

வாய்ப்புகளும், வழங்களும் அனைத்து மக்களுக்கும் சரிசமமாக கிடைக்க வேண்டும் என்று முதல்வர் கூறினார். இந்த வாய்ப்புகளில் ஜாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு சிலரிடம் மட்டும் சென்று சேர்வது இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவது தான் உண்மையான வளர்ச்சி என்றும் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top