Connect with us

உண்மையான அதிமுக நாங்கள் தான்: ஓபிஎஸ் தரப்பில் மனு!!

ஓபிஎஸ்

தமிழகம்

உண்மையான அதிமுக நாங்கள் தான்: ஓபிஎஸ் தரப்பில் மனு!!

நேற்றைய தினத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் அதிமுக தொண்டர்கள் மோதிக் கொண்டதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

இந்நிலையில் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு யாருக்கு உரிமை இருக்கிறது என இருதரப்பினரும் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் விடப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்ற வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இன்று காலை இபிஎஸ் அவர்கள் முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது இன்று பிற்பகல் ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து சீலை அகற்ற உத்தரவிடும்படி ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதனை ஏற்ற நீதிபதி இது தொடர்பான மனுத்தாக்கல் விசாரணையை நாளை நடத்துவதாக கூறியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top