தமிழகத்திலிருந்து பெண்மணி, அம்மா என்று மக்களால் அழைக்கப்பட்டவர் செல்வி ஜெ. ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக இருந்தார்.
அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக இருந்தார். இவ்வாறு இருக்கையில் அவர் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மரணம் இன்றுவரையும் சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது. இது குறித்து தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுகவும் சட்டப்பேரவையில் வாதிட்டனர்.
தற்போது அப்போலோ நிர்வாகம் சில முக்கிய அறிவிப்புகளை கூறியுள்ளது. அதன்படி எங்கள் தரப்பு வாதங்களை நாங்கள் நீதிமன்றத்தில் நிச்சயமாக கூறுகிறோம்.
ஆனால் ஆணையத்தின் முன் ஆஜராக மாட்டோம் என்று கூறியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அப்போலோ வாதிட்டுள்ளனர்.
ஏனென்றால் வர்ணனையாளர் போல ஆணையம் தன் இஷ்டத்துக்கு தகவல்களை கசிய விட்டது என்றும் அப்போலோ மருத்துவமனை கூறியுள்ளது. எந்த ஒரு விசாரணை ஆணையத்தின் தகவல்களும் இதுவரை கசியதில்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதற்கு பதில் அளித்தனர்.