இடம் எல்லாம் பார்த்தாச்சு? தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ரெடி..!!

தமிழகத்தில் மாணவர்கள் அனைவருக்கும் எம்பிபிஎஸ் படிப்பு என்பதே இலட்சியமாக காணப்படுகிறது. ஆனால் இதனை பலராலும் படிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர்கள் எம்பிபிஎஸ் நிகரான மற்றொரு மருத்துவ படிப்பினையை தேர்வு செய்து படித்து வருகிறார்கள்.

அதன்படி ஹோமியோபதி, சித்தா மருத்துவம், நேச்சுரோபதி உள்ளிட்ட இதர மருத்துவ பிரிவுகளை மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இதனால் இத்தகைய மருத்துவ பிரிவுகள் நம் தமிழகத்தில் மேன்மேலும் வளர்ச்சி காணப்படுகிறது.

அதன் ஒரு கட்டமாக தமிழகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் பல இடங்களில் படிப்படியாக சித்த மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ஆளுநர் ஒப்புதல் தந்து உள்ளார் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சித்த மருத்துவ பல்கலைக்கழகம் மாதவரம் பால்பண்ணை அருகே சுமார் 19.3 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைப்பார் என நம்புகிறோம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment