கட்சி முடிவு செய்தால் தேர்தலில் போட்டியிட தயார்! யாரும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாது!- உ.பி முதல்வர்!

தற்போது நாடெங்கும் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்திர மாநிலத்திலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்  சட்டப்பேரவை தேர்தல் குறித்து சில அறிவிப்புகள் கூறியுள்ளார். அதன்படி வரும் சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிட கட்சி அனுமதித்தால் போட்டியிடுவேன் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

யோகி ஆதித்யநாத்

எங்கு போட்டியிட வேண்டுமென பாஜக மேலிடம் விரும்புகிறதோ அங்கு நான் போட்டியிடுவேன் என்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். யார் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை பாஜக நாடாளுமன்ற குழு முடிவு செய்யும் என்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளதற்கு முன்னுதாரணமாக உத்தரபிரதேசம் விளங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளும் கலவரம் ஏதுமின்றி அமைதியாக நடைபெற்றது என்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்  கூறியுள்ளார்.

அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் சமுதாயத்தின் கடைசி மனிதனையும் சென்றடைந்து உள்ளன என்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்  கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 4.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார் அரசின் வெளிப்படை தன்மையான பணி நியமன நடைமுறைகள் குறித்து யாரும் விரல் நீட்டி குற்றம் கூற முடியாது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்  கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment