இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகும் டி. இமான் !! மணப்பெண் யாருன்னு தெரியுமா ?
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் டி. இமான். இவர் தளபதி நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் 2001 ஆம் ஆண்டு கால் பதித்தார்.
இதனை தொடர்ந்து கும்கி, மைனா, வெள்ளக்கார துரை, டிக்டிக்டிக் போன்ற 100 படங்களிக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருக்கு கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக பிரிந்து விட்டதாக சோசியல் மீடியாவில் தெரிவித்தார். அதே போல அவரது மனைவி மோனிகா ரிச்சர்டும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாகவும் இதற்கு மேல் நாங்கள் கணவன் – மனைவி இல்லை என தெரிவித்தார்.
இதனால் டி. இமான் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதற்கு பதில் அளித்த இமான் எங்களுடைய தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்ததுக்கு நன்றி என தெரிவித்தார்.
தற்போது சென்னையைச் சேர்ந்த உமா என்பவரை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருமணம் பெற்றோர்கள் மூலம் பேசி முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
