Connect with us

மீண்டும் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம்! சென்னையில் எங்கு தெரியுமா?

drainage 1

செய்திகள்

மீண்டும் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம்! சென்னையில் எங்கு தெரியுமா?

மீண்டும் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம்! சென்னையில் எங்கு தெரியுமா?

கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் பெருவாரியான நீர்நிலைகள் நிறைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் பல இடங்களில் அதி தீவிர கனமழை பெய்து சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தது.

அதிலும் குறிப்பாக நவம்பர் மாதம் பெய்த அதிதீவிர கனமழையால் தலைநகர் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல காட்சியளித்தது. இதனை வடிகால் முறையில் வெளியேற்றம் செய்யப்பட்டது.

இதற்காக தமிழகத்தில் மழைநீர் வடிகால் திட்டம் அமைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தியாகராஜ நகரில் மீண்டும் மழைநீர் வடிகால் திட்டம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி சென்னை தியாகராயநகரில் ரூபாய் 40 கோவில் புதிதாக மழை நீர் வடிகால் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் திருப்புகழ் குழு அளித்த அறிக்கையின் படி மழைநீர் வடிகால் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது என தற்போது தகவல் வெளியானது.

சென்னை மாநகராட்சியில் ரூபாய் 184 கோடியில் சுமார் 55 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிதாக மழை நீர் வடிகால் அமைக்க திட்டம் உள்ளதாக அண்மை அறிவிப்பு கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top