மறுபடியும் ஆபத்திற்குரிய நாடுகளின் பட்டியல் வெளியிடு! விமான நிலையங்களில் பரிசோதனை கட்டாயம்!!

ஒமைக்ரான் பாதிப்பு தென்னாப்பிரிக்க நாட்டில் தோன்றி அதன் பின்னர் ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கும் பரவியது. இதனால் இந்திய அரசாங்கம் குறிப்பிட்ட சில நாடுகளை பட்டியலிட்டு அதனை ஆபத்திற்குரிய நாடுகளாக அறிவித்து இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்து வரும் பயணிகளுக்கு முறையான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் மற்றுமொரு ஆபத்து நாடுகள் குறித்தான புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள ஆபத்தான நாடுகள் கொண்ட புதிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மீண்டும் எடுத்துள்ளது.

இந்த பட்டியலில் காங்கோ, எத்தியோப்பியா, கென்யா, நைஜீரியா, துனிசியா, ஜாம்பியா, கஜகஸ்தான் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இந்தியா வருபவருக்கு விமான நிலையங்களில் பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்று இந்திய அரசாங்கம் கூறியுள்ளது.

ஏற்கனவே உலகிலுள்ள பிற நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஆபத்துக்கு நாடுகளின் பட்டியலில் வெளியிட்டுள்ளதால் பரிசோதனை மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment