கடந்த 10 நாட்களாக நம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டி மட்டுமில்லாமல் தமிழர்களின் வீர விளையாட்டுகள் பலவும் தொடர்ச்சியாக நடைபெற்றது. குறிப்பாக சேவல் சண்டை, மஞ்சுவிரட்டு மற்றும் கிடா சண்டை போன்றவைகளும் நடைபெற்றது.
அந்த வகையில் எருதுவிடும் விழாவும் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென்று வேலூர் மாவட்ட ஆட்சியர் விழாவுக்கு தற்காலிக தடை விதித்திருந்தார். அதன்படி வேலூரில் 22ஆம் தேதி எருது விடும் விழா நடைபெற்றது, பாதியிலேயே தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இதனை மீண்டும் நடத்த வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் விழாவுக்கு மீண்டும் அனுமதி அளித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடந்த 22ஆம் தேதி கொரோனா நடைமுறையை பின்பற்றாமல் நடந்த எருதுவிடும் விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் தற்காலிக தடை விதித்திருந்தார். விழா நடத்தும் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மீண்டும் எருதுவிடும் விழாவுக்கு அனுமதி அளித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளுடன் எருதுவிடும் விழா நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு அனுமதி அளித்தார்.