Connect with us

நீட் தேர்வு சோதனை விவகாரம்: பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மீண்டும் தேர்வு!!

நீட்

செய்திகள்

நீட் தேர்வு சோதனை விவகாரம்: பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மீண்டும் தேர்வு!!

கேரள மாநிலம் கொல்லம் அடுத்த ஆயூரில் உள்ள தனியார் கல்லூரியில் 17-வயதான மாணவி நீட் தேர்வு எழுதினார். மெட்டல் டிடெக்டர் மூலம் மாணவியை சோதனை செய்தபோது அவரது உள்ளாடையில் இரும்பு கொக்கி இருந்ததால் சத்தம் வந்தது.

இந்நிலையில் பெண் ஊழியர் ஒருவர் மாணவியை வற்புறுத்தி உள்ளாடையை கழற்ற வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே தேர்வை முடித்த மாணவி கொல்லம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதோடு சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவி வலியுறுத்தினார். இந்த விவகாரம் குறித்து உண்மையை கண்டறியும் குழுவை மத்திய அரசு அமைத்ததையடுத்து, கல்லூரியில் பணியாற்றிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சூழலில் கேரளாவில் நீட் தேர்வு சோதனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு செப்டம்பர் 4ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top