பிளஸ் 2 மாணவர்களுக்கு மறுதேர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

b658acb920140bb5a741ed8c33f5081b

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள் மறு தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார் 

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டு இன்று வெளியான மதிப்பெண் பட்டியலில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அனைத்தும் குறிப்பிடப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுத்த 50 சதவீத மதிப்பெண்கள், பதினோராம் வகுப்பு தேர்வில் எடுத்த 20 சதவீத மதிப்பெண்கள் மற்றும் செய்முறை தேர்வில் எடுத்த 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களாக குறிப்பிடப்பட்டுள்ளது 

இந்த மதிப்பெண் கணக்கில் திருப்தி அடையாத மாணவர்களுக்காக தேர்வு நடத்தப்படும் என்றும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த தேர்வு நடைபெறும் என்றும் அந்த தேர்வை மாணவர்கள் எழுதிக் கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மறுதேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வரும் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல் தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment