உலகில் 2019ஆம் ஆண்டு முதன் முதலாக கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது முதலில் சீனா நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் 2020ஆம் ஆண்டில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனாவின் வீரியம் அதிக அளவு பரவியது.
அதே ஆண்டில்தான் இந்தியாவிலும் அதிக அளவில் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் தொடர்ச்சியாக இந்தியாவில் பல மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதார பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல இன்னல்க மக்கள் சந்திக்க நேரிட்டது.
இவ்வாறு உள்ள நிலையில் தற்போது தான் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அடிமட்டத்தில் குறைந்து வருவதாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் 200-க்கும் குறைவாக கொரோனாவின் பாதிப்பு பதிவாகிக் கொண்டு வருகிறது.
இவ்வாறு உள்ள நிலையில் முதலில் தோன்றிய சீன நாட்டில் தற்போது அதிக அளவில் கொரோனாவின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால் சீனாவில் உள்ள பல மாகாணங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சீனாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி சுமார் 1.70 கோடி பேர் வசிக்கும் சென்சின் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது சீன அரசு.