
தமிழகம்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு!!!
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில் நடப்பாண்டில் கடந்த மே மாதம் மாணவர்களுக்கு தேர்வு நடைப்பெற்றது.
இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில் மறுகூட்டலுக்கு பல லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்றும் மறுகூட்டல் சான்றிதல்களை அன்றைய தினத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
பட்டியலில் இடம் பெறாத பதிவுகளுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.
