ஒகேனக்கல்: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் அனுமதி-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் கொரோனாவின் பரவல் மெல்ல மெல்ல குறைந்து விட்டது. அதோடு மட்டுமல்லாமல் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நோயாளிகளும் அதிக அளவு குணமாகி வருகின்றனர்.
இது குறித்து இன்று காலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். இந்த நிலையில் கொரோனா குறைந்துவிட்டதால் தமிழகத்தில் அமல்படுத்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அதுவும் குறிப்பாக மழலையர் நர்சரிப் பள்ளிகளும் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் நாளைய தினம் முதல் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இவ்வாறு தமிழக அரசு அனைத்திற்கும் அனுமதி அளித்து கொண்டு வருகிறது.
அந்த வகையில் சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு குளிக்க அனுமதி அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சுமார் ஒன்றரை ஆண்டுக்குப் பின்னர் ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஒகேனக்கல் அருவி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் தற்போது ஒகேனக்கல் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
