பஞ்சாப்பை வீழ்த்துமா ஆர்சிபி? இன்றைக்காவது கோலி அடிப்பாரா? பவுலிங் தேர்வு செய்த கேப்டன்..!!

தற்போதும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. அதுவும் குறிப்பாக லக்னோ குஜராத் அணிகள் புதிதாக களம் இறங்கி தங்களது விளையாட்டை நன்றாக வெளிப்படுத்தி கொண்டு வருகிறது.

இதனால் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களில் புதிதாக வந்த இரண்டு இந்த இரண்டு அணிகள் இடம் பெற்றுள்ளது மற்ற அணிகளுக்கு ஆச்சரியமாக காணப்படுகிறது.  இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

இதில் பஞ்சாப் அணியை ஒருவேளை ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீழ்த்தினால் 16 புள்ளிகளுடன் தகுதி சுற்றுக்கு நுழையும் வாய்ப்பு பிரகாசமாக பெங்களூர் அணிக்கு காணப்படும். மேலும் பஞ்சாப் அணிக்கும் தகுதிச்சுற்று செல்ல இது ஒரு முக்கியமான வாய்ப்பாக காணப்படுகிறது.

எனவே இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே போட்டியானது மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் ஃபேப் டு பிளேசிஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.