
செய்திகள்
#BREAKING ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் அதிகரிப்பு… ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கி வரும் வட்டி கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட்டி விகிதமானது 5.40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளதால், வங்கிகளுக்கான ரெப்கோ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்த்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெப்போ விகித உயர்வை அறிவித்தது. அதிக பணவீக்கத்தின் காரணமாக, முன்னதாக இரண்டு முறை ரெப்கோ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. மே மற்றும் ஜூன் மாதங்களில் அடுத்தடுத்தடுத்து உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தால் 90 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்கோ வட்டி விகிதம் உயர்ந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விகித நிர்ணயக் குழு இன்று நடைபெற்ற நாணயக் கொள்கை கூட்டத்திற்கு பிறகு ரெப்போ விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ரெப்போ விகிதம் மாற்றப்படாமல் இருந்த நிலையில், பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதைச் சமாளிக்கும் நோக்கில் ரெப்போ (வட்டி) விகித்தை 0.40 சதவீதம் உயர்த்தியது. இதனால் ரெப்போ விகிதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக உயர்ந்தது.
அதன் பின்னர் மீண்டும் ஜூன் மாதத்தில் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக ரெப்கோ வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு, 5.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
