News
35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடிகையாளர்கள் வங்கியில் பணம் எடுக்க தடை: ரிசர்வ் வங்கி

பெங்களூருவைச் சேர்ந்த தனியார் வங்கிக்கு ரிசர்வ் வங்கி திடீர் தடை விதித்துள்ளதால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெங்களூரு தனியார் வங்கியான ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கிக்கு பணபரிவர்த்தனை செயல்பாடுகளில் ஈடுபட தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கி புதிதாக கடன் கொடுக்க, டெபாசிட்டுகளை ஏற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கியில் இருந்து 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடிகையாளர்கள் வங்கியில் பணம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
