ஓபிஎஸ் இடத்தை பிடித்தார் ஆர்.பி உதயகுமார்: பரபரப்பு தகவல்

ஓபிஎஸ் வகித்து வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்பி உதயகுமார் பெற்றுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையே பதவியை பிடிக்கும் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் ஈபிஎஸ் தரப்பு வெற்றி பெற்று வருகிறது என்பதையும் பார்த்தோம்

rb udhayakumarகுறிப்பாக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடிபழனிசாமி நியமனம் செய்யப்பட்டார் என்பதும் அதனை அடுத்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் அவர்களுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி பறிபோனது மட்டுமன்றி சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் பறிபோகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூடியதில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்பி உதயகுமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. முறைப்படி எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இதுகுறித்து சட்டமன்ற சபாநாயகரிடம் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் எடப்பாடிபழனிசாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment