பினாமி பெயரில் ஆ.ராசா சொத்துகுவிப்பு; அமலாக்கத்துறை முடக்கம்!!

திமுக-வின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய பொதுச்செயலாளராக இருக்கூடிய ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடங்கியுள்ளனர்.

கடந்த 2004 முதல் 2007 வரையில் சுற்றுசூழல் அமைச்சராக ஆ.ராசா இருந்தார். இந்நிலையில் கோவையில் 45 ஏக்கர் நிலம் வாங்கியதை அமலாத்துறை அதிகாரிகள் முடக்கம் செய்துள்ளனர்.

அதிமுக கவுன்சிலர் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்!!

இதனிடையே சொத்துகுவிப்பு வழக்கில் ஆ.ராசா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மம் அனுப்பட்டு இருந்தது. குறிப்பாக வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்துள்ளதாக கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் டெல்லி, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஆ.ராசாவின் பினாமி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

பொங்கல் பரிசு; ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவு!

பின்னர் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில் லஞ்சம் பெற்ற பணத்தில் இருந்து ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலம் வாங்கியதாக விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.