Connect with us

மூலப்பொருட்கள் விலை உயர்வு : ஏப்ரல் 6 முதல் 17-ம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகள் வேலைநிறுத்தம் !!

தீப்பெட்டி

தமிழகம்

மூலப்பொருட்கள் விலை உயர்வு : ஏப்ரல் 6 முதல் 17-ம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகள் வேலைநிறுத்தம் !!

மூலப்பொருட்கள் விலை உயர்வு : ஏப்ரல் 6 முதல் 17-ம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகள் வேலைநிறுத்தம் !!

மூலப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து  ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 17- ம் தேதி வரை தீப்பெட்டி தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி, விருதுநகர்,  திருநெல்வேலி, தென்காசி , வேலூர்,  தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழில் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நான்கு லட்சம் தொழிலாளர்கள் இந்த தொழில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மூலப்பொருட்களின் விலை 30% முதல் 40% வரை உயர்த்தப்பட்டு இருப்பதால் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இது மட்டுமில்லாமல் தீப்பெட்டி உற்பத்தி இருந்தாலும் போதிய உற்பத்தி கிடைக்காமல் இருப்பதால் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 17- ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்திகளை நிறுத்த தொழிற்சாலைகள் முடிவு செய்துள்ளனர்.

600 தீப்பெட்டி கொண்ட ஒரு பண்டலின் விலை 300 இருந்து 350 ரூபாய் வரை முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சைனாவில் இருந்து லைட்டர் தீப்பெட்டியால் 30% பாதிக்கப்படுவதாகவும் அதற்கு ஒன்றிய அரசு தடைவிதிக்க வேண்டும் என சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீப்பெட்டி உற்பத்தி போராட்டத்தால் நாளொன்றுக்கு 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால் அந்த தொழிலை நம்பியுள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top