Connect with us

‘எவிடென்ஸ்’ கதிருக்கு ரவுல் வாலன்பெர்க் விருது!: தலைவர்கள் வாழ்த்து;

evidence kathir

செய்திகள்

‘எவிடென்ஸ்’ கதிருக்கு ரவுல் வாலன்பெர்க் விருது!: தலைவர்கள் வாழ்த்து;

‘எவிடென்ஸ்’ கதிருக்கு ரவுல் வாலன்பெர்க் விருது!: தலைவர்கள் வாழ்த்து;

தினந்தோறும் சமூக சீர்திருத்தவாதிகள் ஆங்காங்கே தோன்றிக் கொண்டேதான் உள்ளனர். அவர்களை கௌரவிக்கும் வண்ணமாக பல இடங்களில் விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனைப் போன்ற ஒருவருக்கு ரவுல் வாலன்பெர்க் விருதுக்கு தேர்வாகியுள்ளது. அதன்படி எவிடன்ஸ் கதிருக்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது தேர்வாகியுள்ளது.

இதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எவிடன்ஸ் கதிருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கவுன்சில் சார்பாக மனிதாபிமான மற்றும் மனித உரிமைகளுக்காக சிறந்த பணிக்காகவும், தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கான பாதுகாவலராகவும் திகழ்ந்ததற்காகவும் மதுரை எவிடன்ஸ் கதிருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டியல்,பழங்குடியின மக்கள் உரிமைக்காக தொடர்ந்து பணியாற்றும் எவிடன்ஸ் கதிருக்கு விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்நிலையில் தேசிய தலைவர் ஒருவரும் எவிடன்ஸ் கதிருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் உயரிய விருது பெறும் எவிடன்ஸ் கதிருக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் மனித உரிமை என்பது பட்டியல் மக்களின் உரிமையையும் சேர்த்து தான் பார்க்க வேண்டும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை கருத்து கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top