581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதா?- உ.பி நீதிமன்றத்தில் பரபரப்பு!!

உ.பி-யில் காவல்நிலையில் வைக்கப்பட்டு இருந்த 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களை பொறுத்தவரையில் போதைப்பொருள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன் போதைப்பொருள் சிறப்பு தடுப்பு நடவடிக்கையின் கீழ் சுமார் 581 கிலோ கஞ்சாவை குற்றவாளிகளிடம் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

மலேசியாவின் புதிய பிரதமர் அன்வர் இப்ரஹிம் தேர்வு

இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட போது அனைத்து கஞ்சாவும் எலிகள் சாப்பிட்டு விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பேசிய நீதிபதிகள் எலிகளை பிடிக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் உண்மையில் 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

ஏற்கனவே அம்மாநிலத்தில் 195 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டு விட்டதாக காவல்துறையினர் கூறியபோது ஆதாரம் சம்பிக்கவில்லை என்றும் சுமார் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 1,400 பெட்டி மதுபானங்களை எலிகள் குடித்துவிட்டதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்ததனர்.

சாத்தான்குளம் மரண வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இந்த சூழலில் வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் மேலும் நடக்காமல் இருக்க தற்போது விசாரணை நடைப்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.