ரேஷன் கடைகளில் பொருட்கள் பற்றிய பலகை இருக்கவேண்டும்: சுற்றறிக்கை;
இந்தியாவிலேயே விலை குறைவாக மக்களுக்கு பொருட்கள் கிடைக்கும் இடமாக உள்ளது ரேஷன் கடைகள். ரேஷன் கடைகளில் நம் தமிழகமே தலை சிறந்ததாக காணப்படுகிறது. ஏனென்றால் எந்த ஒரு மாநில அரசும் அறிவிக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசியை நம் தமிழக அரசு அறிவித்து வழங்கிக் கொண்டு வருகிறது.
அதோடு மட்டுமில்லாமல் கடந்த மாதம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. அவ்வப்போது ரேஷன் கடைகளுக்கு அறிவிப்புகள் சுற்றறிக்கைகள் வெளியிடப்படும்.
அந்த வரிசையில் தற்போது நியாயவிலை கடைகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நியாயவிலை கடைகளில் இனி பொருட்களின் விவரங்களை கொண்ட பலகையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் இவ்வாறு கடிதத்தை அனுப்பியுள்ளார். குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பொருட்களின் விவரங்களை காட்சிப்படுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலை நேரம், பண்டங்கள் இருப்பு விவரம், விற்பனை விலை உள்ளிட்டவை தகவல் பலகையில் இடம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
