அறிவித்த முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு! 17ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது!!

பொங்கல் நெருங்கி விட்டாலே மக்கள் அனைவரும் சுறுசுறுப்பாக தங்களது வீடுகளை அலங்காரம் செய்வர். அதோடு மட்டுமில்லாமல் வெளியூரில் வாழும் மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு விரைந்து திரும்புவர். பொங்கல் சமயத்தில் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வருஷா வருஷம் வழங்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு இருபத்தியோரு வகையான பொங்கல் பரிசு தொகுப்பு அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி 17-ஆம் தேதி திங்கட்கிழமை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏனென்றால் நம் தமிழக அரசு ஜனவரி 18ஆம் தேதி தைப்பூசத்தை ஒட்டி அதற்கு முந்தைய நாளான 17ஆம் தேதி திங்கள்கிழமை விடுமுறை அறிவித்து இருந்தது. இந்த சூழ்நிலையில் ஜனவரி 17-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஜனவரி 17-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என தமிழக அரசு மாற்றி அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களை பெறும் வகையில் ஜனவரி 17ஆம் தேதியை விடப்பட்டிருந்த உள்ளூர் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரேஷன் பொருட்களை வாங்காதவர்கள் ஜனவரி 17-ம் தேதியில் பொருட் களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment