Connect with us

ரேஷனில் பொருள் வாங்கவில்லையா? கவலையேபடாதீங்க! ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் திறப்பு!!

ரேஷன் கடை

தமிழகம்

ரேஷனில் பொருள் வாங்கவில்லையா? கவலையேபடாதீங்க! ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் திறப்பு!!

ரேஷனில் பொருள் வாங்கவில்லையா? கவலையேபடாதீங்க! ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் திறப்பு!!

இந்தியாவிலேயே சரியான விலைக்கு பொருட்கள் கிடைக்கும் இடமாக காணப்படுவது நியாயவிலைக் கடைகள் தான். நம் தமிழகத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ரேஷன் கடைகளில் இலவச அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த மாதம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுதானியங்கள் வழங்க திட்டம் உள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஜனவரி 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்று கூட்டுறவு துறை கூறியுள்ளது.

ஏனென்றால் ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு பெறுவதற்கு ஏதுவாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 30ல் ஞாயிற்றுக்கிழமை பதிலாக பிப்ரவரி 26-ஆம் தேதி சனிக்கிழமை ரேஷன் கடைகள் விடுமுறை அளிக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top