தீபாவளி வரை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் திறப்பு!!

இந்தியாவில் இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் மாநில மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர்.சக்கரபாணி

நம் தமிழகத்திலும் பல்வேறு அறிவிப்புகள் தீபாவளி போனஸ் பற்றி தினந்தோறும் தகவல்கள் வெளியாகி கொண்டு வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் நேரம் பற்றி சில நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் நியாய விலை கடை பற்றி சில முக்கிய அறிவிப்பு அறிவித்துள்ளார் அமைச்சர் சக்ரபாணி.அதன்படி தீபாவளி வரை தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து நியாயவிலை கடைகள் திறந்திருக்கும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

எந்த ஒரு நியாயவிலை  கடையிலும் பயனாளர்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு பேட்டியளித்தார்.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைவர் என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது. இவை மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment