
தமிழகம்
ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ’ஜாக்பாட்’… அகவிலைப்படி உயர்வு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இதனை கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஒரு வாரத்திற்குள் அரசு நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் அகவிலைப்படி 28%-ஆக உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2852 கட்டுநர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதனால் தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூ.73 கோடி செலவாகும் என கூறியுள்ளது.
மேலும், தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரேஷன் கடை ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
