Connect with us

“அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல்”…!!! ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு ;;

ரேஷன் அரிசி

தமிழகம்

“அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல்”…!!! ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு ;;

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான விவகாரம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில்  அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 4 எஸ்.பி-க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக உணவு கூட்டுறவு மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நெற்பயிர் சேமிப்புக் கிடங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், புதிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கும் பணிகளை தமிழக அரசு விரைந்து செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

மேலும், பொதுமக்களுக்கு தேவையான ரேஷன் அரிசியை மட்டும் வாங்குமாறும், இதற்கு மாறாக ரேஷன் அரிசி களை வாங்கி இடைத்தாரர்களுக்கு விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top