Connect with us

தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே ரேசன் பொருட்கள்: அதிரடி அறிவிப்பு

Tamil Nadu

தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே ரேசன் பொருட்கள்: அதிரடி அறிவிப்பு

573f38cee4babb39c6820a11971d0bb2-2

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி செலுத்த வேண்டுமென மத்திய மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் பொதுமக்களுக்கு வலியுறுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஒரு சில அதிகாரிகள் அன்பாகவும் சிலர் அதிரடியாகவும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை விழிப்புணர்வு செய்து வருகின்றனர் 

இந்த நிலையில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் தரப்படும் என சேலம் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சேலம் மாவட்டத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தடுப்பூசிகளின் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தியதன் சான்றிதழை காண்பித்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ரேஷன் பொருட்களை வாங்குவதற்காகவே தடுப்பூசி செலுத்துவார்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்வார்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ரேஷன் கடைகளில் அதிக கூட்டம் கூடுவதால் கொரோனா பரவலை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top